நவ.11 முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்- போக்குவரத்து துறை அமைச்சர்

தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

*  தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவ.11 முதல் இயக்கப்படுகின்றன.

* 13  முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.

* கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

* கடந்தாண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் இந்தாண்டு தீபாவளிக்கு முன் 14,757 பேருந்து இயக்கப்படுகின்றன.

*  நவ.11, 12, 13ந்தேதிகளில் தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

*  தீபாவளிக்குப்பிறகு நவ. 15, 16, 18 தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com