திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது: தினகரன் கருத்து

திவாகரன் உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளார் என டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ கூறினார்.
திவாகரனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது: தினகரன் கருத்து
Published on

சென்னை:

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.விடம், திவாகரன் ‘அம்மா அணி’ என்ற புதிய அமைப்பு தொடங்கியது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு தினகரன், “திவாகரன் உடல்நலம் மட்டுமல்ல, மனநலமும் பாதிக்கப்பட்டு உள்ளார். யார் தூண்டுதலின் பேரில் அவர் புதிய அமைப்பு தொடங்கினார் என்பது விரைவில் தெரியவரும். திவாகரனை அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் காண்பிக்க வேண்டும். எங்கள் கட்சி குடும்ப கட்சி இல்லை” என்றார். 

X

Maalai Malar
www.maalaimalar.com