நாளைய தமிழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்தான்- திவாகரன் பரபரப்பு பேச்சு

நாளைய தமிழகத்தின் தலைவராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குவார் என்று தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் திவாகரன் பேசியுள்ளார்.
தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திவாகரன் பேசியபோது எடுத்தபடம்.
தஞ்சையில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திவாகரன் பேசியபோது எடுத்தபடம்.
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையில் நடைபெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன் பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகாவில் இருந்து வந்த சிலருக்கு பெரியார் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் யார் பாடுபடுகிறார்களோ அவர்கள் பின்புதான் நாங்கள் இருப்போம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

தி.மு.க தாங்கள் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் கவனக்குறைவாக இருந்ததால் சில இடங்களில் அவர்களின் வெற்றி பறிக்கப்பட்டது. சில நேரங்களில் நான் அனைத்து கட்சிகள் குறித்தும் விமர்சனம் செய்வேன். ஆனால் தமிழக மக்கள் யார் பின்னர் இருக்கிறார்களோ அவர்கள் பின் நானும் இருப்பேன். நாளைய தமிழகத்தின் தலைவராக தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com