என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
  X

  தற்கொலை செய்து கொண்ட இலக்கியா. கணவர் பாண்டியராஜனுடன் உள்ளார்.

  வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  சீர்காழி:

  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம்அருகே மயிலக்கோயில் கிரா மத்தைச் சேர்ந்த அன்புதா சன் என்பவரின் மகன் பாண்டி யராஜன் (35) என்பவருக்கும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 வருடம் ஆன நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சனை பிரச்சனை இருந்து, வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து இலக்கியாவின் தந்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த குணசேகரன், கொள்ளிடம் போலீசில் கொடுத்த புகாரில் தனது மகள் இலக்கியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச்சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×