திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படுமா?

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் பணிகள் நடைபெறுகின்றன.வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை தேடி கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.
நொச்சிப்பாளையம் சாலையில் இட நெருக்கடியில்  ஆர்.டி.ஓ. பணிகள் நடைபெறும் தனியார்  இடம்.
நொச்சிப்பாளையம் சாலையில் இட நெருக்கடியில் ஆர்.டி.ஓ. பணிகள் நடைபெறும் தனியார் இடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் வீரபாண்டி பிரிவு அருகே திருப்பூர் தெற்கு ஆர். டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. தினசரி ஏராளமான வாகனங்கள் பதிவு, வாகன உரிமம் , தரச்சான்று புதுப்பிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர். ஆர்.டி.ஓ அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் வீரபாண்டி பிரிவு அடுத்த நொச்சிப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியார் இடத்தில் வாகனங்கள் ஆய்வு மற்றும் விண்ணப்பதாரர்கள் எட்டு போட்டு காட்டுதல் போன்றவை நடைபெறுகின்றன.நொச்சிப்பாளையம் சாலையில் ஆர்.டி.ஓ.ஆய்வு பணிகள் நடந்து வரும் இடம் மிகவும் குறுகலானது. மேலும் வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் இடத்தை கண்டுபிடித்துவர வேண்டியுள்ளது.

தெற்கு ஆர்.டி. ஓ அலுவலகத்திற்கு புதிய இடம் தேர்வு செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவாக இடம் தேர்வு செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஒட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com