சேலத்தில் பரவலாக மழை ஓமலூரில் அதிகபட்சமாக 35 மி.மீ. பதிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.
சேலத்தில் பரவலாக மழை ஓமலூரில் அதிகபட்சமாக 35 மி.மீ. பதிவு
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 35 மில்லிமீட்டர் வரை மழை பதிவானது.

சேலத்தில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:- சங்ககிரி - 22.3, காடயாம்பட்டி - 18, தம்மம்பட்டி - 14, ஏற்காடு - 8.4, எடப்பாடி - 3.2, ஆணைமடுவு - 3, சேலம் - 2.9 என மொத்தம் 106.80 மில்லிமீட்டர் மழை பதிவானது.

X

Maalai Malar
www.maalaimalar.com