என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மதுபோதை தகராறில் தொழிலாளியின் மர்ம உறுப்பை அறுத்த நபர் யார்? போலீசார் விசாரணை
  X

  கோப்புபடம்

  மதுபோதை தகராறில் தொழிலாளியின் மர்ம உறுப்பை அறுத்த நபர் யார்? போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேனி செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை அறுத்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.

  காங்கயம் :

  தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டி (வயது 30). இவர் திருப்பூர் வேலம்பாளையம் படையப்பா நகரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் தேனி செல்வதற்காக நள்ளிரவு 12 மணியளவில் திருப்பூர் பழைய பஸ் நிலையம் வந்தார்.

  பின்னர் அங்கு மது குடித்துவிட்டு குடிபோதையில் கோவில்வழி பஸ் நிலையம் வந்து பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அருண்பாண்டி நின்று கொண்டிருந்ததை பார்த்து எங்கு போகிறீர்கள் என்று கேட்டார். அருண்பாண்டி தான் தேனிக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். அப்போது அந்த ஆசாமி நான் தாராபுரம் வரை செல்கிறேன், வாருங்கள் உங்களை தாராபுரத்தில் இறக்கி விடுகிறேன். அங்கிருந்து தேனி செல்லுங்கள் என்றார். இதனால் அருண்பாண்டியன் அந்த ஆசாமியின் மோட்டார்சைக்கிளில் ஏறி தாராபுரம் நோக்கி சென்றார்.

  இந்தநிைலயில் கொடுவாய் அருகே வந்த போது அவர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். அப்போது மது போதையில் இருந்த அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி, அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை ஏதோ ஒரு ஆயுதத்தால் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். அந்த வழியாக வந்தவர்கள் அருண்பாண்டி ரத்தக்காயங்களுடன் கிடப்பதை பார்த்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அருண்பாண்டி நடந்த சம்பவம் குறித்து ஊதியூர் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்பாண்டியனின் மர்ம உறுப்பை அறுத்த ஆசாமியை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×