கம்பத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Published on

கம்பம்:

தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் 73-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதையொட்டி தேனி தெற்கு மாவட்டத்திலிருந்து நகர்மன்றத் தலைவர்கள், நகர பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கம்பத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், கம்பம் நகர செயலாளர்கள் (வடக்கு) துரை நெப்போலியன், (தெற்கு) சூர்யா செல்வகுமார், நகர்மன்றத் தலைவர் வனிதா, துணைத்தலைவர் சுனோதா, தேனி தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் வீரபாண்டியன்,கம்பம் 16 வார்டு நகர்மன்ற உறுப்பினர் தேயிலை சம்பத், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சசி மற்றும் கம்பம் நகர மன்ற தி.மு.க. உறுப்பினர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் 25 பயனாளிகளுக்கு 3 சக்கர பைக், தையல் எந்திரங்கள், சிகை அலங்கார கடை சாய்வு நாற்காலிகள், வீல் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com