டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார்.18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்காளர் உரிமை, கடமை, நேர்மை குறித்து உரையாற்றினார். வாக்களிப்பதின் அவசியம் குறித்து தாசில்தார் வாமனன் எடுத்துரைத்தார். சிறப்பு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் புதிய வாக்காளர்களுக்கான அறிவுரைகளை வழங்கினார்.

18 வயதான மாணவ-மாணவிகள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்ப்பதற்காக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட வருவாய்த்துறையினர் மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். மாணவி உலகேஸ்வரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பப்பி வின்சென்ட் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com