ராணுவ வீரர் மர்மச்சாவு

ராஜபாளையம் அருகே ராணுவ வீரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சாவு.
சாவு.
Published on

விருதுநகர்

ராஜபாளையம் அருகே உள்ள ஆசிலா புரத்தைச் சேர்ந்தவர் சுப்புராம் (வயது51). ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இவரது தந்தை பெருமாள்  சங்கரன்கோவில் அருகே உள்ள பந்தப்புளி கிராமத்தில் வசிக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்புராம் தனது தந்தையை பார்த்துவிட்டு வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று சுப்புராம் தனது வீட்டில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெருமாள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் சுப்புராம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com