காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி

காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி நடந்தது.மதுரை எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது.
காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் இறகுப்பந்து போட்டி
Published on

அருப்புக்கோட்டை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த இறகுப்பந்து போட்டி அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியில் நடந்தது. இந்த போட்டிகளை கல்லூரி முதல்வர் செல்லத்தாய் தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் ஜாக்லின் பெரியநாயகம் வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளின் முடிவில் மதுரை அமெரிக்கன் கல்லூரி முதல் இடத்தையும், திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி 2-ம் இடத்தையும், அருப்புக்கோட்டை சைவ பானு சத்ரிய கல்லூரி 3-வது இடத்தையும், மதுரை

எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 4-வது இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி செயலர் முத்து தினகரன் கோப்பைகளை வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் மணிகண்டன், மாதவன் மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com