search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி
    X

    அன்னதான நிகழ்ச்சியில் கோவா முதல்வர் உணவருந்திய போது எடுத்தபடம். அருகில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் பலர் உள்ளனர்.

    தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி

    • தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
    • தேவர் குருபூஜை விழாவையொட்டி ேகாவா முதல்வர் கலந்துகொண்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே தும்மு சின்னம்பட்டி பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் முத்து ராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை யொட்டி பா.ஜ.க. சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடை பெற்றது.

    முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொண்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலை வர் அண்ணாமலை மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டு ரங்கன் ஆகியோர் கலந்து கொண்டு அவரது நினைவி டத்தில் அமைந்துள்ள தேவ ரின் திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கிருந்து திரும்பிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே யுள்ள தும்மு சின்னம்பட்டி பகுதியி லுள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற மாபெரும் அன்னதான விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவருந்தினர்.

    மேலும் தேவர் குருபூஜை விழாவினையொட்டி நடை பெற்ற இந்த அன்ன தான விருந்து நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை, விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வா கிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் உள்பட ஏரா ளமானோர் கலந்துகொண்ட னர்.

    Next Story
    ×