கோவையில் முதல் பெண் பஸ் டிரைவருடன் பயணம் செய்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

ஷர்மிளா வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கோவையில் முதல் பெண் பஸ் டிரைவருடன் பயணம் செய்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
Published on

கோவை,

கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் செய்தார். காந்திபுரத்தில் இருந்து ஹோப் கல்லூரி வரை அவர் பயணம் மேற்கொண்டார்.

பயணத்தின் போது ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களி டம் கூறுகையில் கோவையில் முதல் பெண் பஸ் டிரைவரான ஷர்மிளாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே பஸ்சில் அவருடன் பயணித்தேன்.

பெண்களால் எந்த நிலையிலும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்துவதாக ஷர்மிளாவின் பணி இருக்கிறது என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com