வலிமை படம் இன்று ரிலீஸ்- விழுப்புரத்தில் கடும் குளிரிலும் படம் பார்க்க திரண்ட அஜித் ரசிகர்கள்

தமிழகம் முழுவதும் வலிமை திரைப்படம் இன்று 1,000- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. அதிகாலை 4 மணி மற்றும் 7 மணிக்கு ரசிகர்கள் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது.
விழுப்புரத்தில் கடும் குளிரிலும் படம் பார்க்க திரண்ட அஜித் ரசிகர்கள்
விழுப்புரத்தில் கடும் குளிரிலும் படம் பார்க்க திரண்ட அஜித் ரசிகர்கள்
Published on

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் நகரில் புதுவை-விழுப்புரம் சாலையில் வணிக வளாகத்தில்அமைந்துள்ள3 திரையரங்குகளிலும், கே.கே ரோட்டில் அமைந்துள்ள ஒரு திரையரங்கிலும்,ரங்கநாதன் சாலையில் அமைந்துள்ள 2 திரையரங்குகளிலும் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் வெளியிடப்பட்டது.

விழுப்புரம் நகரில் வெளியிடப்பட்ட வலிமை படத்தைக் காண ரசிகர்கள் கூட்டம் கடும் குளிரிலும்,ஆண் பெண் என்று வேறுபாடு இல்லாமல் இளைஞர்கள் அதிகாலை 3 மணிக்கே திரையரங்குகளுக்கு முன்பாக குவிந்தனர்.தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பட்டாசுகளை வெடித்தும் ரசிகர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்கள்.

நடிகர் அஜித்குமார் 1993 -ம் ஆண்டுதமிழில் அமராவதி என்ற திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கி தற்போது 29 ஆண்டுகள் ஆகிறது.வலிமை அவரது 60 வது படமாகும். கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடித்த திரைப்படங்கள் வெளியாகவில்லை.

இப்படம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாகும். இந்த படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளிவந்த ரசிகர்கள் கூறுகையில் சண்டைக்காட்சிகள் அற்புதம் தலைக்கு நிகர் தலைதான். இளைஞர் களை நல்வழிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் இருந்தது என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com