கடையநல்லூரில் யூனியன் கூட்டம்

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
கடையநல்லூரில் யூனியன் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
கடையநல்லூரில் யூனியன் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் யூனியன் சாதாரண கூட்டம் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ் தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், ஆணையாளர் ராதா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், கீதா மணிகண்டன், அருணாசல பாண்டியன், சத்தியகலா தீபக் உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 2023-24-ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் இருந்து போகநல்லூரில் ரூ.4.50 லட்சத்தில் மயான நன்மை கூடம் அமைத்தல், புன்னையாபுரம் ஊராட்சி சிங்கிலிபட்டி தெற்கு தெரு, நாயக்கர் தெரு, முத்தாலம்மன் கோவில் மற்றும் புதுக்காலனியில் ரூ.17.50 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், புன்னையாபுரம் முந்தல் சாலையில் ரூ.8.75 லட்சத்தில் வாறுகால் அமைத்தல், திரிகூடபுரம் ஊராட்சி ராமகிருஷ்ணர் தெருவில் ரூ.4.23 லட்சத்தில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல், பாத்திமா நகர் வடக்கு தெருவில் ரூ.6.86 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைத்தல், காசிதர்மம் சுடுகாட்டில் எரிமேடை அமைத்தல், குலையனேரி தேவர் வடக்கு தெருவில் ரூ.10.31லட்சத்தில் சிமெண்டு தளம் அமைத்தல், சங்குபுரம் அப்துல் கலாம் நகரில் ரூ.4.32 லட்சத்தில் வாறுகால் அமைத்தல் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com