புதியம்புத்தூர் பகுதியில் சேதமான மின்கம்பத்தை மாற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

புதியம்புத்தூர் தட்டப்பாறை செல்லும் சாலையில் சேதமான மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமான மின்கம்பத்தை படத்தில் காணலாம்.
சேதமான மின்கம்பத்தை படத்தில் காணலாம்.
Published on

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் தட்டப்பாறை சாலையில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பமானது சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது.

எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டம் காணப்படும் பகுதியில் சேதமான மின்கம்பம் உள்ளதால் அப்பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும் போது ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.

  எனவே விபத்து ஏற்படும் முன் சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com