சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் பிரதோஷ விழா

கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.
சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் பிரதோஷ விழா நடந்த காட்சி.
சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் பிரதோஷ விழா நடந்த காட்சி.
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது. பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக் கொண்டு அலைக் கழியாத நிலையையும் அளிக்கும். 

சகலதோஷமும் போக்கி சந்தோஷம் அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஐதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜை யுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. 

தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெரு மானுக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். 

விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com