3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

பாலக்கரையில் 3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலியானார்பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
3 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
Published on

திருச்சி,

திருச்சி கோப்பு மேல தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ், இவரது மகன் மகிழ் மித்திரன் (வயது 3) இவன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியில் உள்ள தாத்தா வீட்டிற்கு வந்து தங்கி இருந்தான்.

இந்நிலையில் மகிழ்மித்திரன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது எர்த் வயரை தெரியாமல் தொட்டுவிட்டான். இதனால் திடீரென்று அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து மகிழ் மித்திரன் மயங்கி விழுந்தான். இதை யடுத்து சிறுவனை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாத்தா வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பேரன் திடீரென்று மின்சாரம் தாக்கி பிறந்த சம்பவம் பாலக்கரை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com