search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாயர்புரத்தில்  பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா
    X

    சிவத்தையாபுரத்தில் சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி மரக்கன்று நடுகின்ற காட்சி.

    சாயர்புரத்தில் பேரூராட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா

    • சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சாயர்புரம் பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி சார்பில் சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் சாயர்புரம் பேரூராட்சி பகுதியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவினா சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் அறிவாழி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், பேரூராட்சி மேஸ்திரி கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×