விபத்துக்களை தடுக்க வாகனங்களின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்

லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.
விபத்துக்களை தடுக்க வாகனங்களின் பின்புறம் ஒளிரும் ஸ்டிக்கர்
Published on

அவினாசி :

இரவு நேரத்தில் செல்லும் வாகனங்களின் பின்னால் மற்ற வாகனங்கள் மோதாமல் இருப்பதற்காக அவினாசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாஸ்கர், அவினாசி ராஜன் நகர் அருகே அவ்வழியே சென்ற டிரக் லாரிகள், லாரிகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்களின் பின்புறம் ஒளிரும் சிகப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இது குறித்து ஆய்வாளர் கூறுகையில், இரவு நேரத்தில் முன்னால் செல்லும் வாகனங்கள் மீதும் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்கள் மிது பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடிவிபத்து ஏற்படுகிறது.

இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் நடவடிக்கையாக கனரக வாகனங்கள் உள்ளிட்ட 30 வாகனங்களுக்கு பின்னால் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டபபட்டது. இதேபோல் நாளையும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com