விகாஸ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா

ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம், பாடல்களுடன் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா.
விநாயகர் சதுர்த்தி விழா.
Published on

திருப்பூர் :

திருப்பூர் கூலிபாளையத்தில் உள்ள விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கூனம்பட்டி ஆதின திருமடம் ஸ்ரீ.ல.ஸ்ரீ.ச. நடராஜ சுவாமிகள் முன்னிலையில் பூஜை நடந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சக்கரவர்த்தி பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரி தலைவர் அருட்செல்வம், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி பொருளாளர் மஞ்சு, இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மோகன்குமார், சர்கார் பெரியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கூலிபாளையம் (ஜே.சி.பி.) அண்ணாதுரை, கோபால், ஜெயமுருகன் லாரி சர்வீஸ் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் ஆண்டவர் யு.ராமசாமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். விழாவில் மாணவ-மாணவிகள் விநாயகர் போல் வேடமிட்டு, நாடகம் நடத்தி பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் ராதா ராமசாமி, செயலாளர் ராமசாமி மாதேஸ்வரன், துணை செயலாளர் சிவப்பிரியா மாதேஸ்வரன், பள்ளியின் முதல்வர் அனிதா ஆகிேயார் கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com