திருப்பூர் மாவட்ட வீடியோ- புகைப்பட கலைஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றதுகூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார்.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தபோது எடுத்த படம்.
புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தபோது எடுத்த படம்.
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்ட வீடியோ, போட்டோகிராபர்ஸ் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்தல் திருப்பூர் ஜீவா காலனி மில் தொழிலாளர் கூட்டுறவு சொசைட்டி மண்டபத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் பாரதிவாசன் தலைமை வகித்தார். பொருளாளர் இளங்கோ முன்னிலை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து சங்கப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்வு, சங்கத்தின் வரவு - செலவு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட வீடியோ போட்டோகிராபர்ஸ் சங்க புதிய தலைவராக எம். கார்த்திகேயன், செயலாளராக இளங்கோ, பொருளாளராக வில்லியம், துணைத்தலைவர்களாக கதிர்வேல், சுப்பிரமணிய சிவா, துணைச்செயலாளர்களாக சரவணன், சண்முகசுந்தரம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக ரமேஷ், சுப்பிரமணி, வேணுகோபால், பழனிச்சாமி ,ஜீவானந்தம் ,முருகநாதன், ஜெயபாலன் மற்றும் பலர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு திருப்பூர்,பல்லடம்,அவிநாசி, காங்கேயம், தாராபுரம் ,உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், உள்ளிட்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டோகிராபர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com