திருப்பூரில் ஆன்லைன் பண பரிவர்த்தனை மைய உரிமையாளரை தாக்கி ரூ. 4.50 லட்சம் பறிப்பு

மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர்.
காயமடைந்த  சிவராஜ்.
காயமடைந்த சிவராஜ்.
Published on

 திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிபாளையம் சின்னச்சாமி லே-அவுட்டை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 45). இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் பண பரிவர்த்தனை மையம் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2-ந்தேதி தனது மையத்தை பூட்டிவிட்டு, மையத்தில் இருந்து ரூ. 4 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

அங்கேரிபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவரை கட்டையால் தலையில் அடித்துவிட்டு அவரிடம் இருந்து பணப்பையை பறித்துக்கொண்டு தப்பியது.

இதனை சற்றும் எதிர்பாராத சிவராஜ் திருடன் திருடன் என கத்தினார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் பணப்பையுடன் மர்ம ஆசாமிகள் தப்பிவிட்டனர். இது தொடர்பாக சிவராஜ் அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பணப்பறிப்பில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com