சிறுத்தை நடமாட்டம் வதந்தியால் பொதுமக்கள் பீதி

7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது. போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெருமாநல்லூர், ஜூலை.8-

திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூலிபாளையம் அடுத்துள்ளது வெள்ளியம்பாளையம். இப்பகுதியை சுற்றி எஸ்.பெரியபாளையம், கோவி ந்தம்பாளையம், பெட்டிக்கடை, திம்மநாயக்கன்பாளையம், சிவசக்தி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். உடனே இது குறித்து ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுத்தை நடமாட்டம் வதந்தி என்பது தெரியவந்தது. சமூக வலைதளங்களில் தவறான புகைப்படத்தை பதிவிட்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் தகவலை பரப்பியது தெரியவந்தது.

இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் எஸ்.பெரியபாளையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com