முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த விசைத்தறியாளர்கள்

மின்கட்டண சலுகை வழங்கிய முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் தந்த போது எடுத்த படம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவிற்கு அழைப்பிதழ் தந்த போது எடுத்த படம்.
Published on

மங்கலம் :

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் நாளை கோவை மாவட்டம்,கருமத்தம்பட்டி பகுதியில் விசைத்தறி மற்றும் கைத்தறிகளுக்கு மின்கட்டண சலுகை வழங்கிய தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர்.இதில் தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பு செயலாளர் இரா.வேலுச்சாமி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் சித்தோடு கே.சுப்பிரமணியன், மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் மங்கலம் சங்க நிர்வாகி.சுல்தான்பேட்டை ஆர்.கோபால், தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் ஈரோடு.கந்தவேல் ,தமிழ்நாடு விசைத்தறி சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க தலைவர் செல்வகுமார், பல்லடம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com