வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.
சிவசேனா கட்சி சார்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர்:

சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 263ம் ஆண்டு பிறந்தநாளையொட்டி திருப்பூர் மண்ணரையில் உள்ள அவரது சிலைக்கு சிவசேனா கட்சி சார்பாக சிவசேனா இளைஞரணி மாநில தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகநாதன், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சேகர், மாவட்டத் தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்பினர் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com