கந்து வட்டி புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு

பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது. காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

காங்கயம்:

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கந்து வட்டி தொழில் நடைபெறுகிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.கந்து வட்டி பிரச்னை தொடர்பான புகார்களை பெற்று விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், அது குறித்த புகார்களை தெரிவிக்க 94981 76731 மற்றும் 94981 01320 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இது குறித்த அறிவிப்பினை, பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. காங்கயம் பஸ் நிலையம் முன்பு 4 ரோடு சந்திப்பில் காங்கயம் போலீசார் சார்பில் பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com