கொரோனா சிகிச்சை விவரங்களை பெற தொலைபேசி எண்கள் அறிவிப்பு

மாவட்ட அளவிலான கொரோனா தொடர்பான தகவல்கள், ‘வார் ரூம்‘ குழுவால் பராமரிக்கப்படும்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., அலுவலக கூட்டரங்கில் ‘வார் ரூம்‘ திறக்கப்பட்டுள்ளது. 2 டாக்டர்கள், தாசில்தார் மற்றும் அலுவலர்கள், போலீசார் அடங்கிய, குழு 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. 

தலா 8 மணி நேர ‘ஷிப்ட்’ முறையில் 24 மணி நேரமும் ‘வார் ரூம்‘ இயங்கி வருகிறது. மாவட்ட ‘வார் ரூம்‘ திறக்கப்பட்டுள்ள நிலையில் 1077, 0421 2971199, 2971133 ஆகிய தொடர்பு எண்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில்:

மாவட்ட அளவிலான கொரோனா தொடர்பான தகவல்கள், ‘வார் ரூம்‘ குழுவால் பராமரிக்கப்படும். கொரோனா தொற்று தொடர்பான சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறலாம். தொற்று பாதிப்பு தொடர்பாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்டத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையம், அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி தொடர்பான விவரங்களையும் ‘வார் ரூம்‘களில் கேட்டுப்பெறலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com