கோவில்பாளையம் டெர்ப்ஸ் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிற்சி

பயிற்சி முகாமிற்கு கல்லூரியின் இயக்குனர் இளங்குமரன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பயிற்சி முடிவில் கல்லூரி துணை முதல்வர் நவீனா ஜாஸ்மின் நன்றி கூறினார்.
 திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்ற காட்சி. 
 திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்ற காட்சி. 
Published on

பல்லடம் ,நவ.14-

பல்லடம் அருகே உள்ள பொங்கலூரை அடுத்த கோவில் பாளையத்தில் டெர்ப்ஸ் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமிற்கு கல்லூரியின் இயக்குனர் இளங்குமரன் தலைமை தாங்கினார். முதல்வர் கிருஷ்ணவேணி வரவேற்றார். பயிற்சியில் கோவை பி.எஸ்.ஜி. மேலாண்மை நிறுவனத்தின் இணை பேராசிரியர் ராம்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆராய்ச்சி நெறிமுறைகள், கற்றல் திறன் மேம்படுத்துதல், பேராசிரியர்கள் தங்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்தல் குறித்து விளக்கிப் பேசினார். பயிற்சி முடிவில் கல்லூரி துணை முதல்வர் நவீனா ஜாஸ்மின் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com