அவினாசியில் ஆதிக்கம் செலுத்தும் சுயேட்சைகள்

அவினாசி பேரூராட்சியில் தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதில் சுயேட்சைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

அவிநாசி:

அவிநாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில்  தி.மு.க. கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.அ.தி.மு.க 6 இடத்திலும் மற்றும் சுயேச்சை 3 இடங்களை பிடித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

1. வது வார்டில், ஈ.ப.சிவப்பிரகாஷ் தி.மு.க, 595 வாக்குகள், 2-வது வார்டில் எஸ்.கவிதா அ.தி.மு.க. 344 வாக்குகள், 3 வது வார்டில் க.தங்கவேல் தி.மு.க. 331 வாக்குகள், 4-வது வார்டில் கி.சரவணகுமார சுயேட்சை 230 வாக்குகள், 5-வது வார்டில் மு.மோகன் சுயேட்சை 387 வாக்குகள், 6-வது வார்டில் பா.தனலட்சுமி தி.மு.க.297 வாக்குகள், 7வது வார்டில் பி.சசிகலா தி.மு.க. 497 வாக்குகள்.

8-வது வார்டில் ஏ. கருணாம்பாள் காங்கிரஸ் - 408 வாக்குகள், 9-வது வார்டில் அ.பத்மாவதி அ.தி.மு.க. 370. வாக்குகள், 10வது வார்டில் எஸ்.தேவி.அ.தி.மு.க 518 வாக்குகள், 11 வது வார்டில், பி. திருமுருகநாதன் தி.மு.க.653 வாக்குகள்.

12 வது வார்டில். ஆர்.சாந்தி அ.தி.மு.க. 418 வாக்குகள்,13 -வது வார்டில் இரா.கார்த்திகேயன் சுயேட்சை 583 வாக்குகள்,14 வது வார்டில் எம்.சித்ரா அ.தி.மு.க.295 வாக்குகள்,15 -வது வார்டில் மு.பர்கதுல்லா தி.மு.க. 509. வாக்குகள்,16 வது வார்டில் வி.கோபாலகிருஷ்ணன் காங்கிரஸ் 560 வாக்குகள், 17-வது வார்டில் ரமணி தி.மு.க. 373 வாக்குகள், 18 வது வார்டில் ஜே.ஸ்ரீதேவி. அதி.மு.க. 678 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அவினாசி பேரூராட்சியில் தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதில் சுயேட்சைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com