காங்கயத்தில் உலக பூமி தினவிழா

காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் உலக பூமி தின விழா அனுசரிக்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயத்தில் உலக பூமி தினவிழா நடைபெற்ற காட்சி.
காங்கயத்தில் உலக பூமி தினவிழா நடைபெற்ற காட்சி.
Published on

காங்கயம்:

காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் உலக பூமி தின விழா அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், காங்கயம்-சென்னிமலை சாலை பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து உலக பூமி தினம் குறித்தும், மண் வள பாதுகாப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com