search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழையகோட்டையில்  காங்கேயம் இன மாடுகள்  ரூ.13 லட்சத்துக்கு விற்பனை
    X

    காங்கேயம் இன மாடுகள். 

    பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகள் ரூ.13 லட்சத்துக்கு விற்பனை

    • காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
    • சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    காங்கயம்:

    திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இங்கு நேற்று நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 56 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 36 மாடுகள் மொத்தம் ரூ.13 லட்சத்துக்கு விற்பனையாயின. இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.71 ஆயிரத்துக்கு காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    Next Story
    ×