நூலக வாசகர்களுக்கு மூலிகை தேநீர்

நிகழ்ச்சியில் அனைவரும் முககவசம் அணியவும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவும், அரசின் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை:

உடுமலை கிளை நூலகம் எண்-2 வாயிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாசகர்கள் இடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. அவ்வகையில் உடுமலை அரசு மருத்துவமனை, இயற்கை மற்றும் யோகா வாழ்வியல் மருத்துவ மையம் சார்பில் மூலிகை தேநீர் வழங்கும் முகாம் நடந்தது. 

நூலகர் கணேசன் தலைமை வகித்தார். முகாமை டாக்டர் ராகவேந்திரசாமி துவக்கி வைத்தார். நோய் தொற்று முழுமையாக குறையாத காரணத்தால் அனைவரும் முககவசம் அணியவும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவும், அரசின் நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து வாசகர்கள், உழவர் சந்தை வியாபாரிகள், போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், மகாத்மா காந்தி உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கு மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், பிரமோத், அஸ்ரப்சித்திகா மற்றும் நூலக வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com