நீட் தேர்வுக்காக கல்வி வழிகாட்டி - கருத்தரங்கு பாலகுருசாமி தகவல்

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர்:

’நீட்’ ஆதரவு இயக்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு அலுவலகத்தில் நடந்தது. '

இதில் பாலகுருசாமி பேசியதாவது:-

’நீட்’ தேர்வின் வழியே இந்திய மருத்துவ படிப்புக்கு, சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கிறது. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

தமிழகத்தில்’நீட்’ தேர்வு நடத்தப்பட்டதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி ஏழை மாணவர்கள் எளிதாக மருத்துவ கல்வியை கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். எனவே தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை நிரந்தரமாக்க வேண்டும்.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்.

பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் ‘நீட்’ தேர்வை வரவேற்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. இதுவே மாணவர்கள் மத்தியில் தயக்கத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. 

இவர்களுக்காகவே கல்வி வழிகாட்டி கருத்தரங்குகள் நடத்த தீர்மானித்துள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com