search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில்  பூப்பந்தாட்ட போட்டி
    X

    பூப்பந்தாட்ட போட்டியில் வென்றவர்களுக்கு  பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

    பல்லடத்தில் பூப்பந்தாட்ட போட்டி

    • முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
    • பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பூப்பந்தாட்ட குழு நடத்திய 9ம் ஆண்டு ஐவர் பூப்பந்தாட்ட போட்டிகள் பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதலிடம் பெற்ற கோவை பி.எஸ்.ஜி. அணிக்கு ரூ.10,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது.2-வது இடம் பெற்ற திருப்பூர் ஹிமாலயா அணிக்கு ரூ.7,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 3-வது இடம் பெற்ற கோவை நஞ்சுண்டாபுரம் அணிக்கு ரூ.5,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. 4-வது இடம் பெற்ற பல்லடம் பூப்பந்தாட்ட குழு அணிக்கு ரூ.3,001 மற்றும் பரிசு கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ராம். கண்ணையன், தங்கலட்சுமி நடராஜன், குமரப்பன்,வேல்மணி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விழாவிற்கு வந்திருந்தவர்களை பூப்பந்தாட்ட குழு தலைவர் சாகுல் அமீது, செயலாளர் சேக் மக்தூம், பொருளாளர் சுரேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    Next Story
    ×