search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  3 டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை
    X

    கோப்புபடம். 

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை

    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 4, 919 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 1,961 கிலோ.தேங்காய் கிலோ ரூ.19.10 முதல் ரூ.23.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.50.40 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,109 கிலோ. கொப்பரை கிலோ ரூ.50.15 முதல் ரூ.75.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.72.15.ஏலத்தில் மொத்தம் 50 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.20 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    Next Story
    ×