search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்   2.80 டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை
    X

    கோப்புபடம்.

    முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருட்கள் விற்பனை

    • சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் சனிக்கிழமை விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. 3,625 தேங்காய் வரத்து இருந்தது. இவற்றின் எடை 1,574 கிலோ. விலை கிலோ ரூ.21.25 முதல் ரூ.23.50 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.23.00.

    45 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 1,192 கிலோ. விலை கிலோ ரூ.55.35 முதல் ரூ.74.40 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.73.65. ஏலத்தில் மொத்தம் 54 விவசாயிகள், 10 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.15 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    Next Story
    ×