காந்தி அமைதி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் வினீத் தகவல்

தேசியம், இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்ப–டுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

அகிம்சை மற்றும் பிற காந்திய முறை மூலம் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கான சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து, ‘காந்தி அமைதி விருது’க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசியம், இனம், மதம், பாலினம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் அனைத்து தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது. விரும்புவோர், தகுந்த ஆதாரங்களுடன், வரும், 26ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், அறை எண்: 35 மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0421 2971168 எண்ணை அழைக்கலாம். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com