

உடுமலை :
உடுமலையை அடுத்த மூங்கில் தொழுவு பகுதியைச்சேர்ந்தவர் கணேஷ்(வயது55). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணின் 24 வயது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்.
தாயுடன் அடிக்கடி தோட்டத்துக்கு வந்துள்ளார்.அப்போது கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்ப்பம் அடைந்த அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்காக பெற்றோர் அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு சம்பவம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட டாக்டர்கள் அது குறித்து உடுமலை மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து உடுமலை மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.