உடுமலையில் நூலகர் தின விழா

நூலகத்தந்தை எஸ். ஆர் .ரங்கநாதன் பிறந்தநாள் நூலகர் தினமாக கொண்டாடப்பட்டது.நூலகத்தை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் சிறப்புரையாற்றினார்.
நூலகர் தின விழா கொண்டாடப்பட்ட காட்சி. 
நூலகர் தின விழா கொண்டாடப்பட்ட காட்சி. 
Published on

உடுமலை :

உடுமலை உழவர் சந்தை எதிரில் உள்ள முழு நேர கிளை நூலகம் எண் இரண்டில் நூலகத்தந்தை எஸ். ஆர் .ரங்கநாதன் பிறந்தநாள் நூலகர் தினமாக கொண்டாடப்பட்டது. உடுமலை கிளை நூலகம் எண் இரண்டு நூலக வளாகத்தில் நடந்த நூலகர் தின விழாவில் நூலகர் கணேசன் வரவேற்றார். வாசகர் வட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார்.நூலக வாசகர் வட்ட ஆலோசகர் எம்.பி அய்யப்பன் எஸ் .ஆர். ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தார். இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம், செயலாளர் சக்தி, பயிற்சியாளர் நாயப்சுபேதார், நடராஜ் ,ராணுவ வீரர் நலச் சங்க பொருளாளர் சிவகுமார், ராணுவ வீரர் லியாகத் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூலகத்தை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். நூலகப்பயன்பாடு குறித்த கட்டுரை ,கவிதை, பேச்சுப் போட்டியில் உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புதிய நூல்கள் கண்காட்சி நடைபெற்றது. இதை முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்கத்தினர் துவக்கி வைத்தனர் .முடிவில் நூலகர் பிரமோத் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், அஷ்ரப் சித்திகா ,நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com