திருப்பூர்,வெள்ளகோவில், தாராபுரத்தில் கனரா வங்கி சார்பில் வீடு-வாகன கடன் முகாம்

வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது. வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

கனரா வங்கி சார்பில் வீடு மற்றும் வாகன கடன் முகாம் திருப்பூர் எஸ்.எம்.இ.,2 கிளை மற்றும் வெள்ளகோவில், தாராபுரம் கிளையில் நாளை 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காைல 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

வீட்டுக்கடன் வட்டி 8.55 சதவீதம் முதல், வாகன கடன் வட்டி 8.80 சதவீதம் முதல் வழங்கப்பட உள்ளது. வாகன கடன் 90 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. பிற வங்கியில் வாங்கிய வீட்டுக்கடனை குறைந்த வட்டி மற்றும் குறைந்த மாத தவணையில் மாற்றி கொள்ளலாம். வாகனக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ.,ரூ.1599 முதல், வீட்டுக்கடன் ரூ.1லட்சத்திற்கு இ.எம்.ஐ., ரூ.772 முதல் வழங்கப்படுகிறது.

குறைந்த பரிசீலனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விரைவான சேவையுடன் நிறைவான பயன் அடையலாம். பொதுமக்களின் கனவு இல்லம் நனவாக , புதிய மற்றும் பழைய வாகனங்கள் வாங்க இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.     

X

Maalai Malar
www.maalaimalar.com