அவிநாசியில் ரூ.4.47 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

விற்பனை சங்கத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது.ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

 அவிநாசி : 

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 220 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில், ஆா்.சி.ஹெச். பி.டி. ரக பருத்தி குவிண்டாலுக்கு ரூ.6,000 முதல் ரூ.7,569 வரையிலும், கொட்டு ரக (மட்ட ரக) பருத்தி குவிண்டாலுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.4 லட்சத்து 47 ஆயிரத்துக்கு பருத்தி ஏல வா்த்தகம் நடைபெற்றது.

X

Maalai Malar
www.maalaimalar.com