search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று முதல் ஒரு மாதத்திற்கு கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை ரத்து -  10-வது முறையாக ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம்
    X

    கோப்பு படம்.

    இன்று முதல் ஒரு மாதத்திற்கு கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை ரத்து - 10-வது முறையாக ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம்

    • கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெற்று வருகிறது.
    • கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடை ந்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-சேலம் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் பயணிகள் ரெயில் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. அதன்படி கோவை-சேலம் பயணிகள் ரெயில் (எண்.06802) மற்றும் சேலம்-கோவை பயணிகள் ரெயில் (எண்.06803) சேவை இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    10-வது முறையாக ப யணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டதால் கோவை, ஈரோடு, சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    Next Story
    ×