அவினாசியில் பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

அவினாசி:

மக்கள் நலனுக்கு எதிராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க., அரசு செயல்பட்டு வருவதாகவும்,10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் பா.ஜ.க. சார்பில் அவினாசி பழைய பஸ் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு அவினாசி நகரத்துணைத் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். நீலகிரி பாராளுமன்ற பொறுப்பாளர் கதிர்வேலன், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சண்முகம், மாவட்ட ஊடகப்பிரிவு துணைத்தலைவர் சந்துரு, ஒன்றிய பார்வையாளர் விஜயகுமார், நகர பொதுச்செயலாளர் மோகன்குமார் உட்பட மாவட்ட மண்டல, அணி, பிரிவு , நிர்வாகிகள் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com