மினி விளையாட்டு அரங்கத்தில் பணிகளை மேம்படுத்த எம்.எல்.ஏ. ஆய்வு

துறை அதிகாரிகளுடன் ஆலோசனை ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மினி விளையாட்டு அரங்கத்தில் பணிகளை மேம்படுத்த எம்.எல்.ஏ. ஆய்வு
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் உள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேம்படுத்த துறை அதிகாரிகளுடன் தேவராஜி எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் ம..அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் சி. எஸ்ஹ பெரியார்தாசன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com