இலவச கண் சிகிச்சை முகாம்

250 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
இலவச கண் சிகிச்சை முகாம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்கம், ஜேஜே கண் மருத்துவமனை இணைந்து கண் சிகிச்சை முகாம் சின்ன கடை தெருவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ தாமோதரன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார், கௌரவ தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

முகாமில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஆர்.ஜி.ரமேஷ் டாக்டர் ஜெயசுதா, முகாமில் கலந்து கொண்ட 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் ரேவதி பாலாஜி, செயலாளர் வடிவேல், பொருளாளர் தண்டபாணி என்கின்ற கணேஷ் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com