வீட்டுக்குள் நுழைய முயன்ற 5 அடி நீள பாம்பு

தீயணைப்பு துறையினர் போராடி பிடித்தனர்வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
வீட்டுக்குள் நுழைய முயன்ற 5 அடி நீள பாம்பு
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் ஊராட் சிக்குட்பட்ட பால்னாங்குப்பம் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். மர வியாபாரி.

நேற்று இவரது வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள நாகப் பாம்பு ஒன்று நுழைய முயன்றுள்ளது.

இதைக் கண்ட இவரது குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டனர்.

பின்னர் வீட்டின் கதவுகளை மூடிக்கொண்டு திருப்பத்தூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் சிறிது நேரம் போராடி பாம்பை பிடித்தனர். பின்னர் அதை சாக்கு பையில் கட்டி திருப்பத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com