நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட ச.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டார்.
சரத்குமார்.
சரத்குமார்.
Published on

நெல்லை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

அந்த கட்சி சார்பில்  போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டார். 

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 10-ல் கலைச்செல்வி ஜெபமலர், 18-ல் சந்திரா, 60-ல் மந்திரமூர்த்தி ஆகியோரும் நெல்லை மாநகராட்சி வார்டு 1-ல் ஆறுமுகராஜ், 9-ல் அருணாச்சலம், 28-ல் அழகேசராஜன், 52-ல் சேதுராமலிங்கம், 54-ல் சண்முக ஆனந்தகுமார் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com