மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- சலூன் கடை தொழிலாளி பலி

பாளை அருகே செங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சலூன்கடை தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

நெல்லை:

 பாளை  அருகே உள்ள செங்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் திருமலை நம்பி (வயது 37). சலூன் கடை தொழிலாளி.

இவர் நேற்று மாலை அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இதில் திருமலை நம்பி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருமலைநம்பி உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com