

நெல்லை:
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது. முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம்.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தனியார் வேலை இணையத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) தங்களது விபரங்களை பதிவு செய்தல் வேண்டும்.
மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.